தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதிய காசா போர் நிறுத்த ஒப்பந்தம்: டிரம்ப் தகவல்

Advertisement

லண்டன்: இஸ்ரேல் -ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் அமெரிக்காவின் அழுத்தத்தின்பேரில் 60 நாள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. முன்னதாக மார்ச் மாதம் குறுகிய கால போர் நிறுத்தம் முறிந்தது. அதன் பின்னர் இரண்டு மாத போர் நிறுத்தம் குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர் மே மாதத்தில் இதேபோன்ற ஒரு போர் நிறுத்த திட்டம் முன்வைக்கப்பட்டது. ஆனால் ஹமாஸ், இதனை போரை குறுகிய நாட்களுக்கு இடைநிறுத்தி பின்னர் போரைத் தொடர உதவும் வழிமுறையாகவே பார்த்தது. மேலும் ஒரு நிரந்தர சமாதான ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் உடன்படாததாக கருதியது. இந்நிலையில் காசாவில் பேரழிவானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் ஹமாஸ் உடனான 60 நாள் போர் நிறுத்தத்துக்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும் இந்த முறை 60 நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் ஏதேனும் வித்தியாசம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்த 60 நாள் போர் நிறுத்த காலத்தில், பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பதற்கு பதிலாக ஹமாஸ் உயிருடன் உள்ள 10 பணய கைதிகள் மற்றும் இறந்த 18 பணய கைதிகளின் உடல்களையும் ஒப்படைக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. 60 நாட்களில் நீண்ட கால ஒப்பந்தம் எட்டப்பட்டால் மீதமுள்ள 22 பிணை கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள். மேலும் காசாவில் போர்களுக்கு நிரந்தர முடிவு கட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளும் இந்த கால கட்டத்தில் நடைபெறும். ஹமாசை பொறுத்தவரை இஸ்ரேலிய படைகள் காசாவில் இருந்து திரும்ப பெறப்படவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.

Advertisement