வரும் 20ம் தேதி வரை கேட் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை: நடப்பாண்டுக்கான கேட் தேர்வு நாடு முழுவதும் 170 மையங்களில் வரும் நவம்பர் 30ம் தேதி கணினி வழியில் நடைபெற உள்ளது. , காலை 8.30-10.30, மதியம் 12.30-2.30, மாலை 4.30-6.30 என மொத்தம் 3 அமர்வுகளாக தேர்வு நடைபெறும். இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கி செப்டம்பர் 13ம் தேதியுடன் முடிந்தது. தற்போது மாணவர்கள் நலன்கருதி விண்ணப்பிக்கும் கால அவகாசம் செப்டம்பர் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து விருப்பமுள்ள பட்டதாரிகள் https://iimcat.ac.in எனும் வலைத்தளத்தில் துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு கட்டணமாக எஸ்சி/எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.1,300ம், மற்ற தேர்வர்கள் ரூ.2600ம் செலுத்த வேண்டும். தொடர்ந்து தகுதியானவர்களுக்கான ஹால்டிக்கெட் நவம்பர் 5ம் தேதி வெளியிடப்பட உள்ளது. தேர்வு முடிவுகள் ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.