தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீட்டின் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்து போதையில் மனைவியை அடித்து துன்புறுத்திய கணவன் கைது

*ஜோலார்பேட்டை அருகே பரபரப்பு
Advertisement

ஜோலார்பேட்டை : ஆந்திர மாநிலம் தச்ஷாராம் பகுதியைச் சேர்ந்தவர் சிவபிரசாத் (36). இவர் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி பகுதியை சேர்ந்த ஜான்சி என்பவரை 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். பின்னர் இரு வீட்டார் சம்பதத்துடன் கடந்த 4 வருடங்களுக் முன்பு திருமணம் செய்து கொண்டனர். மேலும் சிவபிரசாத் ஏலகிரி மலையில் குடும்பத்துடன் தங்கி அங்கு தனியார் ஓட்டலில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

தற்போது ஏலகிரி மலையில் இருந்து குடிபெயர்ந்து ஜோலார்பேட்டை அடுத்த இடையம்பட்டி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறனர். இந்நிலையில் சிவப்பிரசாத் கஞ்சாவுக்கு அடிமை என தெரிகிறது. இதனால் கஞ்சா புகைத்து விட்டு போதை தலைக்கேறியதும் அவ்வப்போது தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். மேலும், வசித்து வரும் வீட்டில் பின்புறம் ேதாட்டத்திலும், மாடியில் பூந்தொட்டியிலும் கஞ்சா செடி வளர்த்து வந்துள்ளார். கஞ்சா கிடைக்காத நிலையில் இந்த கஞ்சா செடிகளை பயன்படுத்தி அவ்வப்போது போதைக்கு அடிமையாகி கஞ்சா போதையில் மிதந்து வந்துள்ளார்.

இதனால் கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜான்சி ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் தனது கணவன் கஞ்சா செடி வளர்த்து வருவதாகவும், இந்த கஞ்சா செடிகளை பறித்து அவ்வப்போது பயன்படுத்தி போதை தலைக்கேறிய பின் தன்னை அடித்து துன்புறுத்தி வருவதாகவும் நேற்று புகார் அளித்தார். இதனையடுத்து, போலீசார் சிவபிரசாத்தின் வீட்டிற்கு சென்று வீட்டில் வளர்த்து வந்த இரண்டு கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குபதிந்து சிவபிரசாத்தை கைது செய்து, திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News