குப்பையில் கிடந்த செயின் உரியவரிடம் ஒப்படைப்பு: தூய்மை பணியாளருக்கு அதிகாரிகள் பாராட்டு
திருவொற்றியூர்: மணலி புதுநகரில் நேற்று முன்தினம் குப்பையை தரம் பிரிக்கும் பணியில், விச்சூர் அம்மன்குளம் பகுதியை சேர்ந்த சகிலா ராணி என்ற தூய்மை பணியாளர் ஈடுபட்டிருந்தார். அப்போது, 12 கிராம் தங்க செயின் குப்பையில் கிடந்துள்ளது. இதுபற்றி மேற்பார்வையாளரிடம் கூறியுள்ளார்.
Advertisement
விசாரையில், புதுநாப்பாளையம் துளசி நகரை சேர்ந்த தனசேகர் என்பவரின் வீட்டில் தவறுதலாக குப்பையுடன் தங்கசெயினை போட்டது தெரிந்தது. இதையடுத்து தங்க செயினை தனசேகரிடம் ஒப்படைத்தனர். சகிலா ராணியின் நேர்மையை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பாராட்டினர்.
Advertisement