கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா?: சவுக்கு சங்கர் அலுவலகத்தில் தொடரும் போலீஸ் சோதனை..!!
சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள சவுக்கு சங்கர் அலுவலகத்தில் 3 மணி நேரத்திற்கு மேலாக போலிஸ் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தேனியில் இருந்து வந்த காவல் ஆய்வாளர் தலைமையிலான 6 பேர் கொண்ட போலீஸ் சோதனை மேற்கொண்டுள்ளது. சவுக்கு சங்கர் அலுவலகத்தில் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என சோதனை நடக்கிறது. பெண் காவல் அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கரை காவல்துறை கைது செய்தது.