மின்சாரம் பாய்ந்து கேங்மேன் பலி 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஒண்ணுபுரம் துணை மின்நிலையத்தில் விளாங்குப்பம் பகுதியை சேர்ந்த பிரபாகரன்(40), கேங்மேனாக பணியாற்றி வந்தார். கடந்த 23ம் தேதி புதுப்பாளையம் மணியக்காரர்கொட்டா பகுதியில் புதிய மின் கம்பம் நடும் பணியில் பிரபாகரன் ஈடுப்பட்டபோது மின்சாரம் பாய்ந்து இறந்தார். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் துறைரீதியாக விசாரணை நடத்தினர். அப்போது, கம்பம் நடும்போது, இளநிலை பொறியாளரின் உரிய வழிகாட்டுதல் இன்றியும், எச்சரிக்கையின்றியும் பணி செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ஜெகன்நாதன் உத்தரவின்பேரில், ஒண்ணுபுரம் மின்வாரிய இளநிலை பொறியாளர் ஜெகதீசன், மின்பாதை ஆய்வாளர்கள் பக்திநாதன், மகாலிங்கம், போர்மேன்கள் சிவக்குமார், செந்தில்குமார் ஆகிய 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
Advertisement
Advertisement