மூணாறு சுற்றுவட்டார பகுதிகளில் சாலையோர கடைகளை குறி வைக்கும் கும்பல்
மூணாறு : கேரளா மாநிலம் மூணாறிலும், சுற்றுப் பகுதிகளில் உள்ள சாலையோர கடைகளை குறி வைத்து நடக்கும் திருட்டுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் சாலையோர கடைகள் மற்றும் வாகனங்களின் டயர்கள் திருடப்படுவது சமீபகாலமாக திருட்டுகள் அதிகரித்து வருகின்றன.
இது குறித்து மூணாறு காவல் துறையிடம் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவில் மூணாறு மாட்டுப்பட்டி சாலையில் உள்ள ரோஸ் கார்டன் அருகே உள்ள சாலையோர கடையில் நள்ளிரவு ஒரு மணி அளவில் கடையை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த ரூ. 10 ஆயிரம் பணம் மற்றும் பொருட்களை திருடி சென்றுள்ளார்.
அந்த மர்ம நபரின் முகம் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிந்துள்ளது. இது சம்பந்தமாக கடை உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மூணாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.