காந்தியின் 157வது பிறந்தநாளில் அவரது கனவு மெய்ப்பட கதர் தொழிலை செழிக்க செய்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
Advertisement
சென்னை: காந்தியின் 157வது பிறந்தநாளில் அவரது கனவு மெய்ப்பட கதர் தொழிலை செழிக்க செய்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அந்நிய நாட்டு துணிகளை புறக்கணித்து கதர் ஆடை அணிந்திட வேண்டும் என்பது காந்தியின் கொள்கை. கதர் ரகங்களுக்கு ஆண்டு முழுவதும் அரசு 30% தள்ளுபடி வழங்கி வருகிறது. கதர் கிராமத்தொழில் வாரியம் மூலம் சிறப்பான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அரசு ஊழியர், ஆசிரியர், மக்கள் அதிக அளவில் கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்திட வேண்டும். காந்தி பிறந்தநாளில் கதர் ஆடை உடுத்துவதே அவருக்கு நாம் செய்திடும் மிகப்பெரிய அஞ்சலி
Advertisement