காந்தியை கொன்ற மதவாதிகளிடமிருந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி
சென்னை: காந்தியை கொன்ற மதவாதிகளிடமிருந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: நமது இந்தியா, அனைத்து மத மக்களுக்குமான மதச்சார்பற்ற நாடு எனும் அடிப்படை தத்துவத்திற்கு வித்திட்டவர் அண்ணல் காந்தியடிகள்! மக்களிடையே வெறுப்பின் விதைகள் தூவப்பட்டு, பிரித்தாளும் சக்திகள் தலைதூக்கும் போதெல்லாம் அவற்றை எதிர்கொள்ளும் வலிமையை நமக்கு என்றும் வழங்கும் ஆற்றல் அவர். நம் தேசப்பிதாவை கொன்றொழித்த மதவாதியின் கனவுகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே அஞ்சல் தலையும் நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும். இதுவே காந்தியடிகளின் பிறந்தநாளில் நாட்டு மக்கள் அனைவரும் ஏற்கவேண்டிய உறுதிமொழி!