கந்தர்வக்கோட்டையில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்: பிசானத்தூர் உயிரி மருத்துவக் கழிவு ஆலைக்கு எதிர்ப்பு
புதுக்கோட்டை: உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் புதுக்கோட்டை மாவட்டம் பிசானத்தூர் கிராம மக்களுக்கு ஆதரவு தெரிவித்து கந்தவர்க்கோட்டை வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆட்டோ ஓட்டுநர்களும் வாகனங்களை இயக்காமல் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். புதுக்கோட்டை மாவட்டம் கந்தவர்க்கோட்டை அருகே பிசானத்தூர் கிராமத்தில் அமையவுள்ள தனியார் உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராக அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் போராட்ட குழுவினருடன் இணைந்து இன்றுடன் 32 நாட்களாக தங்களது போராட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுவரக்கூடிய மக்களுடன் அதிகாரிகள் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் ஒரு கோரிக்கையை அவங்களுக்கு எழுத்து பூர்வமாக வழங்கியுள்ளனர். தங்கள் பகுதிக்கு மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை வராது என்று வாக்குறுதி கொடுத்தால் போராட்டம் கைவிடுவோம் என்று அவங்க போராட்டத்தை முன்னெடுத்து உள்ளனர். 32 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு ஆதரவாக கந்தர்வக்கோட்டை பகுதியில் உள்ள வர்த்தக நல சங்கத்தினர் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர். கந்தவக்கோட்டை பகுதியில் நடைபெறும் கடையடைப்பு போராட்டத்தால் சுமார் 500க்கும் மேற்பட்ட கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளது. அத்தியாச தேவைகளான பால் மற்றும் மருந்துகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்துள்ளதால் அந்த பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.
மேலும் அந்த பகுதி மக்களுக்கு ஆதரவாக கந்தவர்க்கோட்டை பகுதியிலுள்ள ஆட்டோ ஓட்டுநர்களும் இன்று ஆட்டோ இயக்கப்படாது என அந்த பகுதி மக்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அந்த பகுதிக்கு வந்தால் நிலத்தடிநீர் பாதிக்கப்படும், விவசாய நிலங்களும் விவசாய செய்யமுடியாத நிலை ஏற்படும். மருத்துவக் கழிவு ஆலை செயல்படுவதுநாள் பல்வேறு நோய் பதிப்புகளும் ஏற்படும். எனவே தங்கள் பகுதியில் மருத்துவக் சுத்திகரிப்பு ஆலை கொண்டு வரக்கூடாது என்று எழுத்து பூர்வமாக மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் உத்தரவாதம் கொடுக்கும் வரை தங்கள் போராட்டத்தை கைவிடமாட்டோம் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.