சூதாட்ட செயலி விளம்பரம்: ஷிகர் தவானிடம் ஈடி விசாரணை
புதுடெல்லி: ஒன் எக்ஸ் பெட் என்ற சூதாட்ட செயலியை விளம்பரபடுத்தியதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக அவருக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் அனுப்பியது. ஷிகர் தவான் டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேற்று ஆஜரானார். இதையடுத்து, அவரது வாக்குமூலத்தை அதிகாரிகள் பதிவு செய்தனர். ஏற்கனவே இதே வழக்கில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement