தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கேலோ இந்தியா 2023 குறித்த காலப்பேழை புத்தகத்தை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: கேலோ இந்தியா 2023 குறித்த காலப்பேழை புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (22.8.2024) தலைமைச் செயலகத்தில், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி 2023 குறித்து விளக்கும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் தயாரிக்கப்பட்ட "Future is Here Khelo India Youth Games 2023" என்ற காலப்பேழை புத்தகத்தை (Coffee Table Book) வெளியிட்டார்.
Advertisement

தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய வழிகாட்டுதலின்படி. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்களால் 2023-ஆம் ஆண்டிற்கான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 19.01.2024 முதல் 31.01.2024 வரை சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் சிறப்பாக நடத்தப்பட்டது.

இப்போட்டிகளில், 31 மாநிலங்களிலிருந்து (யூனியன் பிரதேசம் உட்பட) 2875 ஆண்கள் மற்றும் 2755 பெண்கள், என மொத்தம் 5,630 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து 570 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 26 போட்டிகளில் கலந்துகொண்டு 38 தங்கப் பதக்கம். 21 வெள்ளிப் பதக்கம், 39 வெண்கலப் பதக்கம், என மொத்தம் 98 பதக்கங்களை பெற்று தேசிய அளவில் இரண்டாமிடத்தை தமிழ்நாடு அணி பெற்றுள்ளது.

1.020 விளையாட்டு தொழில்நுட்ப வல்லுநர்கள், 1,331 அணி மேலாளர்கள், 480 விளையாட்டு தன்னார்வலர்கள் மற்றும் 1,450 தன்னார்வலர்கள் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடத்துவதற்கு உறுதுணையாக இருந்தனர். அனைத்து விளையாட்டு வீரர், வீராங்கனைகள், உயர் அலுவலர்கள் மற்றும் விளையாட்டு தொழில்நுட்ப வல்லுநர்கள் நட்சத்திர ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டு, தரமான உணவுகள் வழங்கப்பட்டன.

கேலோ இந்தியா போட்டிகளின் தொடக்க விழா இந்தியப் பிரதமரால் சென்னையில் 19.01.2024 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இத்தொடக்க

விழாவில் முதலமைச்சர், ஒன்றிய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இப்போட்டிகள் அனைத்தும் சிறப்பாக நடத்தப்பட்டு 31.01.2024 அன்று முடிக்கப்பட்டது. இப்போட்டிகளை விளக்கும் வகையில் "Future is Here-Khelo India Youth Games 2023" என்ற காலப்பேழை புத்தகம் (Coffee Table Book) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் தயாரிக்கப்பட்டது. இந்த காலப்பேழை புத்தகத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைய தினம் வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம். இ.ஆ.ப., இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, இ.ஆப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Advertisement