முழு பாதுகாப்புடன் வங்கதேச தேர்தல் முகமது யூனுஸ் உத்தரவு
டாக்கா: வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையால் பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்த பிறகு, இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் பதவியேற்றார். வங்கதேச நாட்டில் புதிய அரசை தேர்வு செய்ய பொதுத்தேர்தல் வரும் 2026 பிப்ரவரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரசு அதிகாரிகளின் உயர் மட்ட கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட முகமது யூனுஸ் அனைத்து வாக்கு சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். அதற்கு எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை, அமைதியாக நடந்த தேர்தலாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.