திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் அறிவிப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு கிரிவலம் செல்கின்றனர். அதன்படி ஆடி மாத பவுர்ணமி வரும் 8ம்தேதி பகல் 2.43 மணிக்கு தொடங்கி, 9ம்தேதி பகல் 2.18 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, திருவண்ணாமலையில் வரும் 8ம் தேதி இரவு கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள், ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.