மோசடி வழக்கில் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது
சென்னை: போலியான நிறுவனங்கள் ஆரம்பித்து அரசுக்கு செலுத்த வேண்டிய வரி பணத்தை செலுத்தாமல் மோசடி செய்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 2வருடங்களாக தலைமறைவாக இருந்து வந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டவரை கைது செய்து மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மனிஷா என்பவர் அளித்த புகாரில் விஜயலட்சுமி, State Tax Officer Group-II, Inspection-I, Intelligence-1 என்பவர் அலைபேசி வாயிலாக MMM எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை ஆய்வு செய்தபோது. மேற்படி நிறுவனம் புகார்தாரரின் பழைய முகவரியிட்ட பான்கார்டை உபயோகித்து GST எண் பெற்று நிறுவனம் நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக புகார்தாரர் அலுவலர் முன்பு ஆஜராகி மேற்படி நிறுவனத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும், வாதியின் PAN மற்றும் ஆதார் எண்களை அவருக்கு தெரியாமல் யாரோ ஒரு நபர் உபயோகித்து மேற்படி நிறுவனத்தை GSTல் பதிவு செய்துள்ளார் என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும், விசாரணையில் புகார்காரரின் PAN Card-ஐ பயன்படுத்தி MMM என்ற நிறுவனத்தை ஆரம்பித்து, இந்நிறுவனத்தின் பெயரில் வங்கி நடப்புக் கணக்கு எண் பெற்று, எந்த தொழிலும் செய்யாமல் வங்கி பண பரிவர்த்தனை மட்டும் நடைபெற்றுள்ளது தொடர்பாக GST அலுவலர்கள் ஆய்வு செய்ததில் மேற்படி நிறுவனம் முறையாக GST செலுத்தாததால் அபராதத்துடன் ரூ.1,74,76,963/-அரசுக்கு செலுத்த வேண்டியுள்ளதாக 27.07.2021ம் தேதி ஆணை ஒன்றை புகார்தாரரிடம் GST அலுவலர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தனக்கும் மேற்படி நிறுவனத்திற்கும், அதை சார்ந்த முரளி என்ற நபருக்கும் எவ்வித தொடர்பும் இல்லாத நிலையில் தனது PAN மற்றும் ஆதார் எண்களை தனக்கு தெரியாமல் உபயோகித்து GST விதிகளை மீறி அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அளித்த புகார் மனுவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு, போலி ஆவண புலனாய்வு பிரிவில் 14.09.2021 அன்று வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வழக்கு சம்மந்தமான புலன் விசாரணையில் வழக்கில் சம்மந்தப்பட்ட 3 எதிரிகள் மீது புலன் விசாரணை முடித்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, குற்றப்பத்திரிகையை எழும்பூர், கனம் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நீதிமன்ற கோப்புக்கு எடுக்கப்பட்டு, நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 1 வது எதிரி சம்சுல் ஹூகா என்பவர் நீதிமன்ற விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால் 30.05.2025ம் தேதி நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
வழக்கின் 1வது எதிரி சம்சுல் ஹூதா என்பவரின் மீதான பிடியாணையை நிறைவேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையாளர் ஆ.அருண், உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு, கூடுதல் காவல் ஆணையாளர் ஏ.ராதிகா, வழிகாட்டுதலின்பேரில், மத்திய குற்றப்பிரிவு, காவல் துணை ஆணையாளர் அவர்களின் மேற்பார்வையில், போலி ஆவண புலனாய்வு பிரிவு காவல் உதவி ஆணையாளர் கண்காணிப்பில், காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படையினர் எதிரி சம்சுல் ஹூகா என்பவரை பற்றி புலன் வைத்து விசாரணை செய்து 2 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த எதிரியின் மீதான பிடியாணையை நிறைவேற்ற தலைமறைவு குற்றவாளி சம்சுல் ஹூதா, வ/30 என்பவரை தனிப்படையினர், சென்னை, மண்ணடி, ஐசிஐசிஐ வங்கி, ராஜாஜி சாலை அருகில் 21.11.2025ம் தேதி கைது செய்து, அன்றைய தினமே நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.