நண்பர்களுடன் படகில் சென்றபோது பூண்டி ஏரியில் மூழ்கி மெக்கானிக் மாயம்
சென்னை: ஊத்துக்கோட்டை அடுத்த பூண்டி மோவூர் கிராமத்தை சேர்ந்தவர் ராகேஷ் (22). சென்னையில் ஏசி மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னுடன் பணிபுரியும் நண்பர்களை தனது ஊரான மோவூருக்கு கூட்டிச் சென்றார். பின்னர் பூண்டி ஏரிக்கு சென்று, மீன் பிடிக்கும் 2 படகில் ஏறியுள்ளனர்.
Advertisement
இதில், ராகேஷ் மற்றும் மெக்கானிக் யாசின் சென்ற படகு கவிழ்ந்துள்ளது. ராகேஷ் நீச்சலடித்து கரைக்கு வந்துள்ளார். ஆனால் யாசின் நீரில் மூழ்கி மாயமானார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கி மாயமான யாசினை தேடி வருகின்றனர். விடுமுறை நாளை கழிக்க வந்த வாலிபர் நீரில் மூழ்கிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement