பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : காலிறுதி களத்தில் காஃப் அமர்க்களம்
கடைசியில் அந்த செட்டை கீஸ் கைப்பற்றினார். இருப்பினும் அடுத்த இரு செட்களையும், சுதாரித்து ஆடிய காஃப் வசப்படுத்தினார். அதனால், 6-7 (6-8), 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வென்ற காஃப் அரை இறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு காலிறுதியில் ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா, பிரான்ஸ் வீராங்கனை லோயிஸ் பாய்ஸோன் மோதினர். டைபிரேக்கர் வரை சென்ற முதல் செட்டை பாய்ஸோன் வசப்படுத்தினார். தொடர்ந்து 2வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய அவர் எளிதில் அந்த செட்டை கைப்பற்றினார். அதனால், 7-6 (8-6), 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்ற பாய்ஸோன் அரை இறுதிக்கு முன்னேறினார்.