பிரெஞ்ச் ஓபன் பேட்மின்டன்: ஜப்பான் வீரரிடம் ஆயுஷ் தோல்வி
செசான் செவிக்னே: பிரெஞ்ச் ஓபன் பேட்மின்டன் முதல் சுற்றுப் போட்டியில் நேற்று, ஜப்பான் வீரர் கோகி வாடனபேவிடம் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி தோல்வியை தழுவினார். பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆடவர் பிரிவு முதல் சுற்று போட்டியில் நேற்று ஜப்பான் வீரர் கோகி வாடனபே உடன் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி மோதினார். இப்போட்டியில் ஆயுஷ் சவால் எழுப்பியபோதும், 21-19, 21-19 என்ற நேர் செட் கணக்கில் கோகி வெற்றி வாகை சூடினார். மகளிர் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்றுப் போட்டியில் இந்திய வீராங்கனை அனுபமா உபாத்யாயாவை, சீன வீராங்கனை ஹான் யூ, 21-15, 21-11 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்றார்.
Advertisement
Advertisement