தீபாவளியையொட்டி முதியோர் ஓய்வூதிய திட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை
Advertisement
சென்னை: உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் தீபாவளி (2025) பண்டிகைக்கு முதியோர் ஓய்வூதிய திட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலை விநியோகிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வழங்கல் அலுவலர் தங்களுக்குரிய மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட பட்டியலின்படி இலவச வேட்டி மற்றும் சேலைகளை கிடங்குகளில் இருந்து தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் நியாயவிலை கடைகளுக்கு நகர்வு செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். நியாயவிலை கடை பணியாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதியோர் ஓய்வூதிய திட்ட பயனாளிகளுக்கு விற்பனை முனைய இயந்திரம் மூலமாக பயோமெட்ரிக் முறையில் விநியோகம் செய்யப்பட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Advertisement