இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்க நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கான நடவடிக்கை என்ன?.. திமுக எம்.பி. கனிமொழி சோமு கேள்வி
டெல்லி: பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் உஜ்வாலா திட்டத்தின்கீழ் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது குறித்து மாநிலங்களவை திமுக உறுப்பினர் டாக்டர் கனிமொழி சோமு கேள்வி எழுப்பியுள்ளார்.
நிலுவலையில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய அரசு நிர்ணயித்திருக்கும் காலக்கெடு என்ன? றிவிஹிசீ திட்டத்தின் பயனாளிகளுக்கு சிலிண்டர்களை மீண்டும் நிரப்புவதற்கு அரசாங்கம் வழங்கும் மானியம் எவ்வளவு? தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்கள் எத்தனை பேர் என்று அவர் கேட்டுள்ளார்.