பாக்ஸ்கான் நிறுவனம் புதிதாக ரூ.15000 கோடி முதலீடு: 14,000 பேருக்கு வேலைவாய்ப்பு
Advertisement
சென்னை: ஃபாக்ஸ்கான் நிறுவனம் சென்னை அருகே மேலும் ரூ.15,000 கோடி முதலீடு செய்வதாக உறுதி அளித்துள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் 14,000 பேருக்கு புதிதாக வேலை கிடைக்கும். முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பாக்ஸ்கான் இந்தியாவின் பிரதிநிதி ராபர்ட் வூ இதனை உறுதி செய்துள்ளார். இது மிகப் பெரிய முதலீடு என அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.
முதல்வர் நன்றி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில், ‘‘இதுதான் திராவிட மாடலின் செயல்பாடு. தமிழ்நாட்டை தேர்வு செய்தமைக்காகவும், எங்களுடன் இணைந்து எதிர்காலத்தை வடிவமைக்க முடிவெடுத்தமைக்காகவும் நன்றி. தமிழ்நாட்டைத் தெற்காசியாவின் உற்பத்தி மற்றும் புதுமைக்கான மையமாக உயர்த்துவதற்கான நம் பயணத்தில் இது மற்றுமொரு மைல்கல்’’ என கூறியுள்ளார்.
Advertisement