தமிழ்நாட்டில் பாக்ஸ்கானின் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு உறுதியாக வரும்: சட்டப்பேரவையில் டி.ஆர்.பி. ராஜா பேச்சு
சென்னை: தமிழ்நாட்டில் பாக்ஸ்கானின் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடுஉறுதியாக வரும் என சட்டப்பேரவையில் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா விளக்கம் அளித்துள்ளார். பாக்ஸ்கான் முதலீடு மூலம் 14 ஆயிரம் பொறியாளர்களுக்கு நிச்சயம் வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை முதலீடாக மாற்றும் ‘கன்வர்ஷன் ரேட்' 77% ஆக உள்ளது. அண்டை மாநிலங்களுக்கு வந்த முதலீடு குறித்து நான் பேசவில்லை; அதில் அரசியல் உள்ளது. எந்த முதலீடுகள் எல்லாம் வேலைவாய்ப்பாக மாறுமோ, அதை மட்டும் தான் புரிந்துணர்வு ஒப்பந்தமாக தமிழ்நாடு அரசு கையெழுத்திடுகிறது. ஆந்திராவில் கூகுள் நிறுவனம் முதலீடு செய்வது குறித்த அதிமுகவின் கேள்விக்கு. கூகுள் பிரச்சனையில் அதானியின் தலையீடும் உள்ளது என பதில் தெரிவித்தார். அமெரிக்கா - இந்தியா பிரச்சனையில் நாம் அரசியல் செய்யக்கூடாது. ஒன்றிய அரசு எடுக்கும் முடிவுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். கூகுள் பிரச்சனையில் அதானியின் தலையீடும் உள்ளது என தெரிவித்தார்.