திருப்பூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் உடல்நலக்குறைவால் காலமானார்
08:49 AM Jun 09, 2025 IST
திருப்பூர்: திருப்பூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் உடல்நலக்குறைவால் காலமானார். திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏவும், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளருமான குணசேகரன் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.