முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் மறைவு முதல்வர் இரங்கல்
12:09 AM Aug 06, 2025 IST
சென்னை: முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் மறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: சத்ய பால் மாலிக் அவர்களின் மறைவு செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். வகித்த பொறுப்பில் இருந்து அவர் ஓய்வுபெற்றபோதிலும், அவரது மனச்சான்று உறங்கிடவில்லை. அவர் வகித்த பொறுப்புகளால் மட்டுமல்ல, அவர் எடுத்த நிலைப்பாடுகளாலும் சத்ய பால் மாலிக் வரலாற்றில் நினைவுகூரப்படுவார்.