தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாஜி தலைவர் அண்ணாமலையை ஓரங்கட்டிய குஷியில்: பாஜவுடன் பாசம் காட்டும் அதிமுக மாஜி அமைச்சர்கள்; படுதோல்விக்கு காரணம் என்று புலம்பியவர்கள் தேடி செல்கின்றனர்; விழுப்புரம் ஓட்டலில் நயினாருடன், சி.வி.சண்முகம் சந்திப்பு

விழுப்புரம்: தமிழகத்தில் கடந்த 2019 மக்களவை தேர்தலில் பாஜவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட அதிமுக, தேனி தொகுதியில் மட்டும் ஓபிஎஸ் மகன் வெற்றி பெற்றார். மற்ற அனைத்து இடங்களிலும் அதிமுக- பாஜ கூட்டணி படுதோல்வியடைந்தது. அப்போதே படுதோல்விக்கு பாஜவுடனான கூட்டணிதான் காரணம் என்று அதிமுகவில் முணுமுணுப்புகள் எழுந்தன. தொடர்ந்து 2021 சட்டமன்ற தேர்தலிலும் பாஜவுடன் கூட்டணி அமைத்து அதிமுக தேர்தலை சந்தித்தது. இதில் அதிமுக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. படுதோல்வியை சந்தித்த மூத்த அமைச்சர்களான சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் தோல்விக்கு பாஜ கூட்டணிதான் காரணம் என்று வெளிப்படையாகவே பேசினர்.
Advertisement

விழுப்புரத்தில் தோல்விக்கு பிறகு நடந்த கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற சி.வி.சண்முகம், பாஜவுடன் கூட்டணி வைத்த காரணத்தால் சிறுபான்மையினரின் வாக்கை பெற முடியவில்லை. சிறுபான்மையினர்களின் 16 ஆயிரம் வாக்குகள் நமக்கு குறைந்திருக்கின்றன. அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் மக்களிடையே நல்ல பெயர் இருந்தும் கூட்டணி கணக்கு நமக்கு தோல்வியை ஏற்படுத்திவிட்டது என்று தெரிவித்தார். பாஜ மாநில தலைவராக இருந்த அண்ணாமலை மீதும் வெளிப்படையாகவே விமர்சனத்ைத முன்வைக்க காலப்போக்கில் அதிமுக, பாஜவிடையே வார்த்தை மோதல் அதிகரித்தது.

ஒரு கட்டத்தில் அண்ணாமலையும் அதிமுகவின் தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் அண்ணா குறித்தும் சர்ச்சை கருத்துக்களை கூற அவருக்கு எதிராக அதிமுகவில் மேலும் எதிர்ப்புகள் கிளம்பின. பாஜவுடன் கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டுமென்று அதிமுகவில் மூத்த நிர்வாகிகள் போர்க்கொடி உயர்த்தினர். அதன்படி கடந்த கடந்த 2023 செப்டம்பர் 18ம் தேதி பாஜ கூட்டணி முறிந்துவிட்டதாக அதிமுகவில் அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நடந்த மக்களவை தேர்தலிலும் அதிமுக, பாஜ தனித்தனி கூட்டணி அமைத்தே தமிழகத்தில் போட்டியிட்டது. ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

இதனிடையே 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க பாஜ தலைமை விரும்புவதாக தெரிவித்து பலவகையில் தூது அனுப்பப்பட்டது. ஆனால் பாஜ தலைவராக அண்ணாமலை இருக்கும் வரை அதற்கு சாத்தியமில்லை என்ற தகவல் அளித்த நிலையில் அதிமுகவிலிருந்து விலகி சென்ற நயினார் நாகேந்திரனை மாநில தலைவராக நியமித்து அதிமுகவுடனான கூட்டணியை உள்துறை அமித்ஷா புதுப்பித்துவிட்டு சென்றுள்ளார். இந்த மாற்றத்துக்கு பிறகு, பாஜ கூட்டணியால் ேதால்வியடைந்தோம் என்று கதறிய அதிமுக மாஜி அமைச்சர்கள் பலரும் தற்போது பாசத்துடன் நெருக்கம் காட்டி வருகின்றனர்.

குறிப்பாக அண்ணாமலையை ஓரங்கட்டிய குஷியிலும், தாய் கழகத்திலிருந்து பிரிந்து சென்றவர் என்பதாலும் பாஜ மாநில தலைவர் நாயினார் நாகேந்திரனுடன் அதிமுக தலைமையும், மாவட்டங்களில் உள்ள மாஜி அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் பலரும் நெருக்கம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாஜ தலைவர் நயினாருக்கு, அக்கட்சியைவிட அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள்தான் அதிகளவில் சந்தித்து வரவேற்பை கொடுத்து வருகிறார்களாம். இதனிடையே நேற்று முன்தினம் விழுப்புரத்தில் பாஜ ஆலோசனை கூட்டத்துக்கு வந்த மாநில தலைவர் நயினாருடன் அதிமுக மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் ஓட்டலில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்று சட்டமன்ற தேர்தல் குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் வடமாவட்டங்களில் தான் செல்வாக்கு மிக்கவராக சி.வி.சண்முகம் காட்டிக்கொள்ளும் நிலையில், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிமுக, பாஜ போட்டியிடும் தொகுதிகள் குறித்தும், கூட்டணி ஆட்சி குறித்த பேச்சு குறித்தும் நீண்ட நேரம் விவாதித்ததாக கூறப்படுகிறது. அதேபோல் பாமகவில் நடைபெற்று வரும் தந்தை, மகன் மோதல் நிலவரம், தங்கள் கூட்டணியில் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது. 2021 சட்டமன்ற தேர்தலிலும் பாஜவுடன் கூட்டணி அமைத்து அதிமுக தேர்தலை சந்தித்தது. இதில் அதிமுக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

கூட்டணி ஆட்சி குறித்து இபிஎஸ்தான் முடிவு: நயினார் திடீர் பல்டி

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள பா.ஜ. கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து வருகிறது. குறிப்பாக அண்ணாமலை செல்லும் இடத்தில் இந்த ஒற்றை கருத்தை பேசி வருகிறார். நயினார் நாகேந்திரனும் முதல்வர் இபிஎஸ்தான், கூட்டணிக்கு தலைவர் அவர்தான் என்று மழுப்பலாக பேசி வருகிறார். இதற்கு அதிமுகவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கும் நிலையில், விழுப்புரத்தில் நேற்று முன்தினம் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூட்டணி ஆட்சி குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து நயினார் கூறுகையில், நாங்கள் தேர்தலுக்கு தயாராக இருக்கிறோம்.

கூட்டணியை பேசி முடித்தபின் கூட்டணி ஆட்சியா என்பது குறித்து பதிலை கூறுகிறோம். அமித்ஷா கூறியதைபோல, திருப்பி திருப்பி எல்லா ஊடகத்திலும் கேட்கிறார்கள். இன்று அந்த கேள்விக்கு கடைசியா பதிலை கூறி விடுகிறேன். தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் இபிஎஸ். அவர்தான் முதலமைச்சர். அவர்கள் என்ன முடிவெடுக்கிறார்களோ அதுதான் என்றார். இதுவரை பாஜ கூட்டணி ஆட்சியில் பங்கேற்கும் என்று கூறி வந்த நிலையில் விழுப்புரத்தில் திடீரென நயினார் நாகேந்திரன் இதுகுறித்து இபிஎஸ் முடிவெடுப்பார் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* பாமக தொகுதியில் அதிமுக எம்.பி. நிதி தாராளம்

அதிமுக மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் உள்ளடக்கி ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். இதனிடையே தேர்தல் நெருங்கும் வேளையில் வரும் சட்டமன்ற தேர்தலில் தொகுதி மாற திட்டமிட்டுள்ள சி.வி.சண்முகம் மயிலம் தொகுதியில் முழு கவனம் செலுத்துவதாகவும் அந்த தொகுதியில் தனது எம்.பி. நிதியை தாராளமாக செலவு செய்வதாகவும் கூறப்படுகிறது. அந்த தொகுதியில் தற்போது பாமகவை சேர்ந்த சிவக்குமார் எம்எல்ஏவாக இருக்கிறார். மேலும் இளைஞர்கள், பொதுமக்களை கவர கிரிக்கெட் ேபாட்டி போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி அந்த தொகுதியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement