ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் (79) உடல்நலக் குறைவால் காலமானார்..!!
டெல்லி: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் (79) உடல்நலக் குறைவால் டெல்லியில் காலமானார். உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சத்யபால் மாலிக். இவர் பாரதிய கிராந்தி தள், ஜனதா தள், இந்திய தேசிய காங்கிரஸ், லோக் தள், சமாஜ்வாதி கட்சி ஆகியவற்றில் இணைந்து மக்கள் பணியாற்றி யிருக்கிறார். ஜம்மு-காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டபோது சத்யபால் மாலிக் ஆளுநராக இருந்தவர்.
உத்தரப்பிரதேசத்தில் இருந்து 2 முறை மாநிலங்களவைக்கு சத்யபால் மாலிக் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒடிசா, பீகார், கோவா, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஆளுநராக சத்யபால் மாலிக் பணியாற்றியுள்ளார். உத்தரப்பிர தேசத்தில் இருந்து ஒருமுறை மக்களவைக்கும் தேர்வாகி சத்யபால் மாலிக் எம்.பி.யாக இருந்தார். இவர் நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் நண்பகல் 1 மணியளவில் சத்யபால் மாலிக் உயிரிழந்தார்.