வன ஆராய்ச்சிக் கல்லூரியில் 10ம் வகுப்பு/பிளஸ் 2/பட்டதாரிகளுக்கு வேலை
பணியிடங்கள் விவரம்:
1. டெக்னிக்கல் அசிஸ்டென்ட் கேட்டகிரி-2: 10 இடங்கள் (பொது-1, பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்சி-2, எஸ்டி-2, ஒபிசி-4). வயது வரம்பு: 21 லிருந்து 30க்குள் இருக்க வேண்டும். தகுதி: தாவரவியல்/விலங்கியல்/வேளாண்மை/ வனவியல்/ உயிரி தொழில்நுட்பம்/ வேதியியல்/ சுற்றுச்சூழல் அறிவியல்/புள்ளியியல் உள்ளிட்ட பாடங்களில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பாரஸ்ட் கார்ட்: 3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1). வயது வரம்பு: 18 லிருந்து 27க்குள். தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் பாரஸ்டரி டிரெய்னிங் கோர்ஸ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. டிரைவர்: 1 இடம் (பொது). வயது வரம்பு: 18 லிருந்து 27க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மோட்டார் கார் டிரைவர் உரிமமும், 3 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் பொது அறிவு, பொது ஆங்கிலம், ரீசனிங், மென்டல் ஏபிலிட்டி, பொது அறிவியல் ஆகிய பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். தமிழ்நாட்டில் கோவையில் செப்டம்பர் முதல் வாரம் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
கட்டணம்: பணி எண் 1க்கு ரூ.1050 பிளஸ் ஜிஎஸ்டி, பணி எண் 2க்கு ரூ.850/ பணி எண் 2க்கு ரூ.850 பிளஸ் ஜிஎஸ்டி, பணி எண் 3க்கு ரூ.850 மற்றும் ஜிஎஸ்டி. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.https://www.mponline.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.08.2025.