வெளிநாட்டினர் அமெரிக்காவில் புலம்பெயரும் திட்டம் நிறுத்திவைப்பு: டிரம்ப் அறிவிப்பு
Advertisement
அமெரிக்கா: வெளிநாட்டினர் அமெரிக்காவில் புலம் பெயர்வதற்கான தடை நீண்ட காலம் நீடிக்கும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மளிகை அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது ஆப்கானிஸ்தான் இளைஞர் துப்பாக்கி சூடு நடத்திய விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதனால் பயங்கரவாதிகள் பிடியில் உள்ள நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் புலம் பெயரும் திட்டத்தை நீண்டகாலத்திற்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், முன்னாள் அதிபர் ஜோ பைடன் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் எல்லையை கட்டுப்பாடின்றி திறந்துவிட்டதே அமெரிக்காவின் இந்த நிலைமைக்கு காரணம் என்றும் டிரம்ப் குற்றம்சாட்டினார். அமெரிக்காவின் தடைபட்டியலில் ஆப்கானிஸ்தான், சோமாலியா உள்ளிட்ட 19 நாடுகள் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.
Advertisement