ரூ.1654 கோடி அந்நிய நேரடி முதலீட்டில் மோசடி; மிந்த்ரா நிறுவனம் மீது ஈடி வழக்குப்பதிவு
Advertisement
இதுகுறித்து அமலாக்கத்துறை வௌியிட்ட அறிக்கையில்,
“மிந்த்ரா மொத்த விற்பனை செய்வதாக கூறி, பல்பொருள் சில்லறை விற்பனையில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்தது. ஆனால், மொத்த வணிகம் என்ற பெயரில், வௌிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.1,654.35 கோடி முதலீடுகளை பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இது தற்போதுள்ள நேரடி அந்நிய முதலீட்டு வழிகாட்டுதல்களை மீறுவதாக உள்ளது. இதையடுத்து மிந்த்ரா மற்றும் அதனுடன் தொடர்புள்ள நிறுவனங்கள் மீது அந்நிய நேரடி முதலீடு மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement