தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி: முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் கார் உற்பத்தியை ஃபோர்டு நிறுவனம் தொடங்குகிறது. தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. ரூ.3,250 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவில் 2021ல் உள்நாட்டு கார் உற்பத்தியை ஃபோர்டு நிறுவனம் நிறுத்தியது. இதனால் சுமார் 2,500 பேர் வேலை இழந்தனர். ஃபோர்டின் இந்த வெளியேற்றம் ஆட்டோமொபைல் துறையில் ஒரு பெரிய பேசுபொருளானது.

Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகாகோ சென்றிருந்தபோது ஃபோர்டு நிறுவன உயர் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார். முதலமைச்சரின் அழைப்பை ஏற்று மீண்டும் தமிழ்நாட்டில் கார் உற்பத்தியை ஃபோர்டு நிறுவனம் தொடங்குகிறது. ஆண்டுக்கு 2.35 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது மறைமலைநகர் தொழிற்சாலை. இந்த மாபெரும் முதலீட்டின் மூலம், ஃபோர்டு நிறுவனம் தனது மறைமலைநகர் ஆலையில் ஆண்டுக்கு 2 லட்சத்திற்கும் அதிகமான அதிநவீன இன்ஜின்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

இவை பெரும்பாலும் உலகளாவிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். அமெரிக்காவிற்கு அனுப்பப்பட வாய்ப்பில்லை என்றாலும், பிற சர்வதேச சந்தைகள் இலக்காக இருக்கும். இந்த திட்டத்தின் மூலம், சென்னையில் சுமார் 600 புதிய நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement