தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வரும் காலங்களில் பால் கொள்முதலுக்கு கூடுதல் விலை: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

Advertisement

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள புக்கம்பட்டியில் தேசிய பால்வள தினத்தை ஒட்டி, கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்து பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: தேசிய பால் வள தினத்தை ஒட்டி அனைத்து பால் உற்பத்தியாளர்களுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன். தமிழ்நாட்டில் 5,000 சிறு பண்ணைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வேலை இல்லாத இளைஞர்கள், சுய தொழில் துவங்க விரும்பும் இளைஞர்கள், பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் தலா ரூ. 3 லட்சம் வீதம் 5000 பேருக்கு ரூ.150 கோடி உடனடி கடன் வழங்கப்பட உள்ளது.

மானியத்துடன் 4 சதவிகித வட்டி மட்டுமே கட்ட வேண்டும். இத்துடன் பல்வேறு துறைகள் சார்ந்த மானியத்தையும் இணைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதிகமானோர் சிறு பண்ணை அமைக்க முன் வந்தால் அவர்களுக்கும் மானியக்கடன் வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.3 ஊக்கத்தொகை அளித்தார் முதல்வர். பால்வளத்துறை சார்பில் தரமான பாலுக்கு ரூ.1 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. எருமைகளை பாதுகாக்க 5 மாவட்டங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நல்ல வீரியமான நாட்டின மாடுகளை உருவாக்க மருத்துவர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

நாட்டின மாடுகள் அதிகமான பால் தராது என்பது தவறான கருத்து. அதனை முறையாக கவனித்து மருத்துவர்களின் ஆலோசனை பெற்று பராமரித்தால் அதிகமான பால் பெற முடியும். நாட்டின மாடுகளை அழிவின் பிடியிலிருந்து காப்பாற்ற இளைஞர்களுக்கு பயிற்சி தரப்படுகிறது. தீவன உற்பத்தியை பெருக்க புதிய தொழில்நுட்பத்தை கடைபிடித்து வருகிறோம். வரும் கால கட்டங்களில் பால் கொள்முதலுக்கு அதிக விலை கொடுப்போம். இவ்வாறு கூறினார்.

Advertisement

Related News