நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும்; அகற்றாத அதிகாரிகள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும்: உயர் நீதிமன்றக்கிளை எச்சரிக்கை
03:31 PM Aug 13, 2025 IST
மதுரை: மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும். அகற்றாத அதிகாரிகள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரித்துள்ளது. மீண்டும் மீண்டும் சாலை ஆக்கிரமிப்பு செய்வோர் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.