உணவே மருந்து
* தினம் 6 கிராம் கொள்ளு சாப்பிட்டு வர ஓரிரு வாரங்களில் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.
* நெல்லிக்காய் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மாலைக் கண் நோய் நீங்கும்.
* வெங்காயம், வெள்ளைப் பூண்டு இரண்டும் புற்று நோயை தடுக்க வல்லது.
* கர்ப்பமாயிருக்கும் பொழுது அவ்வப்போது தர்பூசணிப் பழம் சாப்பிட்டு வந்தால் மூளைக்கு பலம் ஏற்படும். கல்லீரல் வலுப்பெறும். பிறக்கும் குழந்தை நல்ல நிறம் பெறும்.
* குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் இருமலுக்கு தினசரி இரண்டு பலாச்சுளைகளை தேனில் தோய்த்துக் கொடுத்து வர குணம் கிடைக்கும்.
* காசினிக் கீரையை கஷாயம் வைத்துச் சாப்பிட்டால் சிறுநீரகத்தில் அனைத்துக் கோளாறுகளும் ஓடி விடும்.
* வெற்றிலை மீது சுண்ணாம்பு பூசி அதன் மேல் தேன் தடவி மூட்டு வலி, வீக்கங்கள் இருக்கும் இடத்தில் கட்டினால் குணம் கிடைக்கும்.
* மதுப்பழக்கத்தால் உண்டான கல்லீரல் நோய் குணமாக ஒரு தேக்கரண்டி பப்பாளி விதைகளை அரைத்து அதில் பத்துத் துளி எலுமிச்சம் பழ ரசத்தை கலந்து சாப்பிட வேண்டும். ஒரு மாதத்திற்கு தினம் ஒரு வேளை சாப்பிட்டால் கல்லீரல் குணமடையும்.
* சப்போட்டா பழம் உண்பதால் நுரையீரல், கல்லீரல், ஆசனவாய் இவற்றில் வரும் புற்று நோய் தடுக்கப்படுகிறது.
* துளசி இலைகளை தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் எந்த நோயும் வராது.
* கண்பார்வைக் கூர்மையடைய கேரட், பப்பாளி, முருங்கைக் கீரை இவற்றை உணவில் அதிகம் பயன்படுத்தவேண்டும்.
- எல். நஞ்சன், முக்கிமலை.