உணவுத் தொழில் செய்பவர்களை ஒன்றிய அரசு காப்பாற்றுமா? கனிமொழி எம்பி கேள்வி
சென்னை: திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி தனது சமூக வலைத்தளம் பதிவில்,‘தூத்துக்குடியிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட கடல் உணவுகள், அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் நடுக்கடலிலேயே துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்படும் அவலத்தை பார்க்க வேதனையாக உள்ளது. மீனவர்கள் தொடங்கி உள்நாட்டு வணிகர்கள், ஏற்றுமதியாளர்கள் என கடல் உணவுத் தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கானவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஒன்றிய பாஜ அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா அல்லது வழக்கம்போல் அவர்களை கைவிட்டுவிடுமா?
Advertisement
Advertisement