உணவு விற்பனை தொடர்பாக 14 வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை..!!
சமையல் எண்ணெயை ஒரு முறையே பயன்படுத்த வேண்டும்
உணவு வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரை பகுப்பாய்வு செய்து வைத்திருக்க வேண்டும். உணவுப் பொருட்களில் ஈ, பூச்சிகள் மொய்க்காத வண்ணம் கண்ணாடி பெட்டியில் மூடி காட்சிப்படுத்த வேண்டும். உணவு எண்ணெயை ஒரு முறை மட்டுமே சமைக்க பயன்படுத்த வேண்டும்.
செய்தித்தாளில் உணவுப்பொருளை பரிமாறக்கூடாது
செய்தித்தாள் போன்ற அச்சிட்ட காகிதங்களில் உணவு நேரடியாக படும் வகையில் பரிமாறவோ பொட்டலமிடவோ கூடாது. உணவை கையாள்பவர்கள் கையுறை மற்றும் தலைமுடி கவசம் போன்றவற்றை தவறாமல் அணிய வேண்டும். சிக்கன், பஜ்ஜி, கோபி மஞ்சூரியன் உள்ளிட்ட உணவு வகைகளை செயற்கை நிறமிகள் சேர்க்கக்கூடாது. உணவு பரிமாற வாழை இலை, பார்ச்மெண்ட் பேப்பர், அலுமினியம் பாயில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.