ஆடு, மாடுகளை தொடர்ந்து மலை, கடலுக்காக மாநாடு: சீமான் பேட்டி
மதுரை: மதுரை விமான நிலைய வளாகத்தில் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
Advertisement
ஆர்எஸ்எஸ் கோட்பாட்டின்படியே பாஜ இயங்கும். அந்த அமைப்பில் பயிற்சி பெற்றவர்கள் அந்த சித்தாந்தப்படியே இயங்குவார்கள். நடிகர் விஜய் சனிக்கிழமைதோறும் பிரசாரம் செய்ய உள்ளது அவரது கட்சி முடிவு. அதில் கருத்துகூற முடியாது. நாம் தமிழர் கட்சியின் `ஆடு, மாடுகளுக்கான மாநாட்டை தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு நடைபெற உள்ளது. நாங்கள் மனிதர்களுக்கு மட்டுமின்றி அனைத்து உயிர்களுக்குமான அரசியல் இயக்கம். இவ்வாறு சீமான் கூறினார்.
Advertisement