நாட்டுப்புறக் கலையில் சிறந்து விளங்கும் 40 கலைஞர்களுக்கு தலா ரூ.20,000 ஊக்கத் தொகை: அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு
சென்னை: சென்னை வர்த்தக மையத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான ஆதி கலைக்கோல் பயிற்சி பட்டறை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மதிவேந்தன் பேசுகையில், ‘‘நாட்டுப்புறக் கலையில் சிறந்து விளங்கும் 10 கலைஞர்கள், நாடகக்கலையில் சிறந்து விளங்கும் 10 கலைஞர்கள், இலக்கிய கலையில் சிறந்து விளங்கும் 10 கலைஞர்கள் மற்றும் காட்சி கலையில் சிறந்து விளங்கும் 10 கலைஞர்கள் என மொத்தம் 40 கலைஞர்களுக்கு தலா ரூ.20,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இந்த தொகை 2 மாதங்களுக்கு ரூ.10,000 வீதம் வழங்கப்படும்’’ என்று கூறினார்.
Advertisement
Advertisement