கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை 2 மடங்கு உயர்வு
அண்ணாநகர்: நாளை மறுநாள் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, அனைத்து பூக்களின் விலை உயர்ந்துள்ளது. விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் இல்லாததால் நேற்றுமுன்தினம் கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை குறைந்தது. நாளை மறுநாள் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, இன்றுகாலை அனைத்து பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ மல்லி 500 ரூபாயில் இருந்து 900க்கும் ஐஸ் மல்லி 400 ரூபாயில் இருந்து 800க்கும் முல்லை 300ல் இருந்து 750க்கும் ஜாதிமல்லி 200ல் இருந்து 750க்கும் கனகாம்பரம் 500ல் இருந்து 800க்கும் சாமந்தி 120 ல் இருந்து 200க்கும் சம்பங்கி 100ல் இருந்து 150க்கும் அரளி பூ 100 ரூபாயில் இருந்து 300க்கும் பன்னீர் ரோஸ் 80ல் இருந்து 140க்கும் சாக்லேட் ரோஸ் 100 இருந்து 180க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
‘’இன்னும் 3 நாட்களுக்கு பூக்களின் விலை நீடிப்பதற்கு வாய்ப்புள்ளது. வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ஆடிமாதம் ஐந்தாம் வாரம் என்பதால் அம்மன் கோயில்களில் விசேஷமாக இருக்கும் என்பதால் அன்றைய தினம் கூட பூக்களின் விலை உயரும்’ என்று கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறினார்.