பலத்த மழையால் கமண்டல நாகநதி ஆற்றில் பாய்ந்தோடும் வெள்ளம்: நாகநதி ஆற்றில் வெள்ள பெருக்கு
ஆரணி: தொடர் மழையால் ஆரணி கமண்டல நாகநதி ஆற்றில் வெள்ளம் பாய்ந்து ஓடியது.
கடந்த ஒரு வாரமாக வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை பெய்வதால் ஜவ்வாது மலையில் மழைபெய்வதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. செங்களத்தோப்பு அணையில் 900 கன அடி நீர் இன்று திறக்கப்பட்டது.
அதனால் கமண்டல நதியும் வேலூர் மாவட்டத்தில் மழை பெய்வதால் காணாமல்லுர் பகுதியில் வரும் நாகநதியும் ஒன்றிணைந்து குன்றத்தூர் அருகே கமண்டல நாகநதியாக உருவெடுத்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அது மட்டுமல்லாமல் குன்றத்தூரில் ஆரம்பிக்கும் கமண்டல நாகநதி ஆறு சீட்டுமங்கலம் பகுதியில் உள்ள செய்யாற்றில் கலக்கின்றது. 20 கிலோமீட்டர் கமண்டல நாகநதி ஆற்றில் வெள்ள பெருக்கெடுத்து ஓடுவதால் அங்கு சுற்றியுள்ள சுமார் 50 ஏரிகள் நிரம்பியுள்ளன. இதனால் 5000 ஏக்கர் விவசாய நிலங்களில் பாய்ந்து வருவதால் விவசாயிகள் பெருந்த மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.