இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மே மாதம் கடைசி வாரத்தில் ரெமால் சூறாவளியை தொடர்ந்து பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 24000 வீடுகள் சேதமடைந்தது. சுமார் 1.88லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் முதல்வர் பைரன் சிங் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணத்தொகையாக ரூ.10ஆயிரம் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.