தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஐதராபாத்தில் இருந்து ஹரியானாவிற்கு தப்பி ஓட்டம் சிகிச்சைக்கு வரும் இளைஞர்களிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட டாக்டர்: வீடியோ ஆதாரங்களுடன் மனைவி போலீசில் புகார்

திருமலை: ஐதராபாத்தில் இருந்து ஹரியானாவிற்கு தப்பியோடி சிகிச்சைக்கு வரும் இளைஞர்களிடம் டாக்டர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதாக அவரது மனைவி வீடியோ ஆதாரங்களுடன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மவுலாலியைச் சேர்ந்தவர் டாக்டர் ஜவ்வாத் அலி காஜா. இவர் கடந்த 2014ம் ஆண்டு ஐதராபாத்தை சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு அவர்களுக்கு 2 குழந்தைகள் பிறந்தன. திருமணத்தின்போது, ​​இளம்பெண்ணின் பெற்றோர் ஜவ்வாத் அலி காஜாவிற்கு வரதட்சணையாக ரூ.25 லட்சம் மற்றும் 40 சவரன் நகைகள் வழங்கினர். ஆனால் திருமணமாகி சில வருடங்கள் ஆன நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்தத் தொடங்கி உள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜவ்வாத் அலி காஜா வீட்டை விட்டு ஓடிவிட்டார். வீட்டின் மேல் தளத்தில் தங்கி இருந்த அவரது நண்பர் விஷ்ணுவர்தனிடம் கேட்டுள்ளார். பின்னர் சிறிது நேரத்திலேயே விஷ்ணுவர்தன் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு விஷ்ணுவர்தன் கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் ஜவ்வாத் அலி காஜா ஒரின சேர்க்கையில் ஈடுபட்டதாக எழுதி இருந்தார். இதுகுறித்து குஷைகுடா காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் இந்த வழக்கில் இருந்து உரிய ஆதாரங்கள் இல்லாததால், டாக்டர் ஜவ்வாத் அலி காஜா தப்பினார். தற்போது ஹரியானாவில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அங்கும் மருத்துவம் என்ற பெயரில் தன்னிடம் சிகிச்சைக்கு வரும் இளைஞர்களை குறிவைத்து அவர்களை அடிபணிய வைத்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பான சில வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை ஜவ்வாத் அலி காஜாவின் மனைவி சேகரித்துள்ளார். வீடியோ, புகைப்படம் ஆதாரங்களுடன் ஐதராபாத் போலீசில் புகார் அளித்துள்ளார்.