கொடி கம்பங்கள் வழக்கு உச்ச நீதிமன்றத்தின் வேறு அமர்வுக்கு மாற்றம்
புதுடெல்லி: தமிழ்நாட்டில் சாலை ஓரங்கள் மற்றும் அரசு நிலங்களில் கொடிக்கம்பங்கள் வைக்கக் கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்ததற்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கொடிக்கம்பங்கள் விவகாரத்தில் ஏற்கனவே தாக்கல் செய்த இதே கோரிக்கை கொண்ட எங்களது தரப்பு அமர்வு தள்ளுபடி செய்தது. அதே சாராம்சம் கொண்ட மற்றொரு மனு மீது உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. எனவே இந்திய கம்யூனிஸ்ட் தொடர்ந்த இந்த வழக்கையும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புதல் பெற்று, நீதிபதி விக்ரம் நாத் தலைமையின் அமர்வில் பட்டியலிட நாங்கள் பரிந்துரை செய்கிறோம் என்று உத்தரவிட்டனர்.