கொடிக்கம்பம் அகற்றும் விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
புதுடெல்லி: தமிழ்நாடு முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக்கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விகரம்நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவில், \” சாலையோரங்களில் கொடிக்கம்பங்களை அகற்றும் விவகாரத்தில் முன்னதாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மேலும் இந்த விவகாரத்தில் தங்களது தரப்பின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள்,வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.