காரில் கொடியை பயன்படுத்த கூடாது செங்கோட்டையன் மீது அதிமுகவினர் போலீசில் புகார்
கோபி: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், காரில் அதிமுக கொடியை பயன்படுத்தி வருவதாகவும், கட்சி அலுவலகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் என்ற பெயர் பலகை இருப்பதாகவும், கரை வேட்டி மற்றும் காரில் ஜெயலலிதா படங்களை பயன்படுத்தி வருவதற்கு தடை செய்ய கூறி அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் கோபி டி.எஸ்.பி அலுவலகத்தில் நேற்று இரவு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோபி அதிமுக நகர செயலாளர் டிரிணியோ கணேஷ் தலைமையில் வழக்கறிஞர் அணியினர் அளித்துள்ள புகாரில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள செங்கோட்டையன் கட்சியின் கொடி மற்றும் சின்னம் ஆகியவற்றை தனது வாகனங்கள் மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்த எந்த தார்மீக உரிமையும் இல்லை. எனவே செங்கோட்டையன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
                 Advertisement 
                
 
            
        
                 Advertisement