மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகையை ரூ.8,000ஆக உயர்த்தி உள்ளோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை: தமிழ்நாட்டில் மீனவர்களுக்கு எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகையை ரூ.8,000ஆக உயர்த்தி உள்ளோம் என மீனவர்கள் நாள் விழாவில் காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
மேலும் "மீனவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் திமுக ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மீனவர்கள் சந்திக்கும் அனைத்து இன்னல்களுக்கு தீர்வு காண நடவடிக்கை. இலங்கை கடற்படையால் மீனவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். திராவிட மாடல் 2.0 ஆட்சியில் மீனவர்களின் உயர்வுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும். மீனவர்கள் நலனில் அக்கறை இல்லாமல் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது.ராமேஸ்வரம் வரை வந்தாலும் பிரதமருக்கு மீனவர்களை சந்திக்க நேரமில்லை. நான் அப்படியல்ல.
கடலோர மாவட்டங்களுக்கு எப்போது வந்தாலும் மீனவர்களை சந்திக்கிறேன். உங்களில் ஒருவனாக நிற்கிறேன் மீனவர்களுக்கு நெருக்கமானது திமுக அரசு. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம். குமரி மாவட்டத்தில் மீனவர்களுக்கு ரூ.567 கோடியில் உட்கட்டமைப்பு பணிகள் செய்து தரப்பட்டுள்ளன எந்த கோரிக்கையையும் ஒன்றிய அரசு செயல்படுத்தாததால், சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் மீனவர்களுக்கு வேண்டிய திட்டங்களை அறிவித்தேன்" என உரையாற்றினார்.