தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மீன் உற்பத்தியை பெருக்கும் வகையில் முத்துப்பேட்டை கடல் பகுதியில் 52,500 இறால் குஞ்சுகள் விடப்பட்டது

*பரங்கிப்பேட்டை அரசு மீன் பண்ணையில் இருந்து எடுத்து வரப்பட்டது

Advertisement

முத்துப்பேட்டை : மீன் உற்பத்தியை பெருக்கும் வகையில் முத்துப்பேட்டை கடல் பகுதியில் 52,500 இறால் குஞ்சுகள் விடப்பட்டது. இந்த குஞ்சுகள் பரங்கிப்பேட்டை அரசு மீன் பண்ணையில் இருந்து எடுத்து வரப்பட்டது.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கடலோரம் படர்ந்துள்ள அலையாத்திக்காடுகள் ஆசியா கண்டத்தில் காணப்படக்கூடிய மிகப்பெரிய அலையாத்தி காடாகும். உலக அளவில் இக்காடுகள் 2 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவில் ஏறத்தாழ 30 நாடுகளில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் இத்தகைய காடுகள் 4,827 சதுர கி.மீ பரப்பளவில் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரையோர பகுதிகளிலும், அந்தமான் தீவு கூடங்களிலும் இக்காடுகள் வளர்கின்றன. இதில் முத்துப்பேட்டையில் உள்ள அலையாத்திக்காடுகள் 11,885,91 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் உள்ளது.

இந்த காடு கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயலின் கோரதாண்டவத்தில் சின்னாபின்னமாகி காணப்பட்டுள்ளது ஒருப்பக்கம் இருந்தாலும் இந்த காடுகளின் மரம், விறகு, கரி, கூரை ஆகியவற்றில் உற்பத்தியாகும் மீன், நண்டு, இறால் அரிய வகையானது.

அதன்வகையில் இப்பகுதியில் பிடிபடும் மீன் வகைகளின் சுவையே தனி சுவைதான் அதனால் இப்பகுதி மீன்களுக்கு அதிகளவில் மவுசு உள்ளது. அதனால் இங்கு தொலைதூரத்தில் இருந்து மக்கள் வந்து மீன் வகைகளை வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில் இப்பகுதியில் மீன் உற்பத்தியை பெருக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கடலில் மீன் குஞ்சுகள் மற்றும் இறால் குஞ்சுகளை கொண்டு வந்து விட்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக நேற்று திருவாரூர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கடலில் இறால் குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டம் 2024- 2025 கீழ் முத்துப்பேட்டை லகூன் பகுதியில் சுமார் 52,500 எண்ணிக்கையிலான வெள்ளை இறால் குஞ்சுகள் பரங்கிப்பேட்டை அரசு மீன் பண்ணையில் இருந்து எடுத்து வந்து விடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதற்கு திருவாரூர் மீன்வளத்துறை உதவி இயக்குநர் ராஜேஷ் குமார் தலைமை வகித்தார் இதில் முன்னதாக ஜாம்புவானோடை வனத்துறை படகு துறையிலிருந்து படகு மூலம் சென்ற மீன்வளத்துறையினர் மற்றும் அதிகாரிகள் லகூன் பகுதியில் அடர்ந்த அலையாத்திக்காடுகள் சூழ்ந்த பகுதி மற்றும் முக்கிய பகுதியில் சுமார் 52500 இறால் குஞ்சுகளை விட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் வனத்துறை சரக அலுவலர் சதீஷ் கண்ணா, வானவர் சீனிவாசன், மீன்வளத்துறை ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், கடலோர சட்ட அமலாக்கத்துறை காவலர் சுரேஷ், காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் அப்பாதுரை, கிராம நிர்வாக அலுவலர் தென்னரசு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜாம்பை கல்யாணம், மீன்வளத்துறை சாகர் மித்ரா பணியாளர்கள் ஜான் பாண்டிவ், ஆகாஷ், ஆலன் வில்பர்ட் மற்றும் கிராம மக்கள் மீனவர்கள் கலந்துக்கொண்டனர்.

Advertisement

Related News