தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

52 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா: ஒலிம்பிக் ஹாக்கியில் அசத்தல்

பாரிஸ்: ஒலிம்பிக் ஹாக்கியில், 52 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி சாதனை படைத்தது. பாரிஸ் ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் 3 லீக் ஆட்டங்களில் நியூசிலாந்து, அயர்லாந்து அணிகளுக்கு எதிராக வெற்றி மற்றும் அர்ஜென்டினாவுக்கு எதிராக டிரா கண்டது. அடுத்து நடப்பு சாம்பியன் பெல்ஜியம் அணியுடன் மோதிய இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் போராடி தோற்றது. காலிறுதி வாய்ப்பை ஏற்கனவே உறுதி செய்துவிட்ட இந்தியா, தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. தொடக்கத்தில் இருந்தே ஒருங்கிணைந்து விளையாடி ஆஸி. கோல் பகுதியை முற்றுகையிட்ட இந்திய வீரர்கள், அலை அலையாகத் தாக்குதல் நடத்தி நெருக்கடி கொடுத்தனர்.
Advertisement

இதன் பலனாக 12வது நிமிடத்தில் அபிஷேக் அபாரமாக கோல் அடிக்க, இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. அடுத்து 13வது நிமிடத்தில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கோல் போட, முதல் கால் மணி நேர ஆட்டத்தின் முடிவில் இந்தியா 2-0 என முன்னிலை வகித்தது. இதைத் தொடர்ந்து, பதில் தாக்குதலை தீவிரப்படுத்திய ஆஸி. அணிக்கு கிரெய்க் தாமஸ் 25வது நிமிடத்தில் கோல் அடித்து நம்பிக்கை அளித்தார். இதனால் ஆட்டம் விறுவிறுப்பானது. டைவேளையின்போது இந்தியா 2-1 என முன்னிலையை தக்கவைத்தது. 3வது குவார்ட்டரின் தொடக்கத்திலேயே ஹர்மன்பிரீத் தனது 2வது கோலை பதிவு செய்து அசத்த (32வது நிமிடம்), இந்தியா 3-1 என முன்னிலையை மேலும் அதிகரித்தது.

இரு அணிகளும் கோல் முனைப்புடன் போராட... கடைசி கால் மணி நேர ஆட்டத்தில் அனல் பறந்தது. ஆட்டம் முடிய 5 நிமிடம் எஞ்சியிருந்த நிலையில் கோவர்ஸ் பிளேக் அடித்த கோலால் (55வது நிமிடம்) ஆஸ்திரேலிய தரப்பு உற்சாகம் அடைந்தது. எனினும், தற்காப்பு ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்திய இந்தியா ஆட்ட நேர முடிவில் 3-2 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றியை வசப்படுத்தியது. 1972 மூனிச் ஒலிம்பிக் போட்டியில் இருந்து, ஒலிம்பிக் ஹாக்கியில் 52 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்தியா சாதனை படைத்தது.

மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் இந்தியா 54 சதவீத நேரம் பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. எதிரணி பாதுகாப்பு அரணை ஊடுருவி பந்தை கடத்திச் செல்வதில் இந்தியா 20 முயற்சிகள் மேற்கொண்ட நிலையில், ஆஸி. தரப்பு 37 முறை தாக்குதலை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியுடன் பி பிரிவில் இந்தியா 2வது இடத்துக்கு முன்னேறிய நிலையில் (3 வெற்றி, 1 டிரா, 1 தோல்வி), ஆஸ்திரேலியா 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது (3 வெற்றி, 2 தோல்வி). காலிறுதி ஆட்டங்கள் நாளை நடைபெற உள்ளன.

Advertisement

Related News