தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங் தேர்வு: இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ்

 

Advertisement

அகமதாபாத்: இந்தியா - மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. அதன்படி இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி, குஜராத்தின் அகமதாபாத் நகரில் இன்று காலை 9.30 மணிக்கு துவங்குகிறது. வரும் 6ம் தேதி வரை இந்த போட்டி நடைபெறும்.

அதைத் தொடர்ந்து, 2வது டெஸ்ட் போட்டி, அக். 10ம் தேதி துவங்கி 14ம் தேதி வரை, டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதற்கு முன், கடந்த 2023ம் ஆண்டு, வெஸ்ட் இண்டீஸ் அணியை அதன் மண்ணில், இந்திய அணி எதிர்கொண்டது. அப்போது, 1-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது.

இம்முறை, ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய அணியை இந்திய மண்ணில் எதிர்கொள்கிறது. சமீப காலமாக, இந்திய அணி எதிர்கொண்ட போட்டிகளில் மகத்தான வெற்றிகளை குவித்து அசைத்து பார்க்க முடியாத சிறந்த அணிகளில் ஒன்றாக திகழ்கிறது. அதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி, பெரியளவில் சவால்களை எதிர்கொள்ளும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்திய அணியில் சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜுரெல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி, ஜெகதீசன், முகம்மது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ் ஆகியோர் உள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரோஸ்டன் சேஸ் (கேப்டன்), வாரிகன் (துணை கேப்டன்), கெவ்லோன் ஆண்டர்சன், அதனேஸ், கேம்ப்பெல், தகநரைன் சந்தர்பால், கிரீவ்ஸ், ஹோப், டெவின் இம்லாக், அல்ஸாரி, பிரண்டன் கிங், ஆண்டர்சன் பிலிப், காரி பியரி, சீல்ஸ் ஆகியோர் உள்ளனர்.

இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய தேஜ்நரின் சந்தர்பால் ரன் எதுவும் எடுக்காமலும், ஜான் கேம்ப்பெல் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து அலிக் அதானேஸ், பிரன்டன் கிங் இருவரும் ஜோடி சேர்ந்து விளையாடி வருகின்றனர். 13 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்துள்ளது.

Advertisement

Related News