மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து பெண் பலி
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண் பலியானார். வடக்கு மும்பையின் தஹிசார் கிழக்கு பகுதியின் சாந்தி நகரில் 24 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்நிலையில் 7வது மாடியில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
Advertisement
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் நீண்டநேர போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்தனர். தீ விபத்தில் சிக்கிய 19 பேர் மீட்கப்பட்டு வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு பெண் உயிரிழந்து விட்டார்.
Advertisement