அனல்மின் நிலைய கட்டுமான பனியின் போது தீ விபத்து: பொன்னேரி அருகே ஆயில் ஏற்றி வந்த லாரியில் தீப்பற்றியது
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள வயலூர் என்ற கிராமத்தில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மிக உயர அனல்மின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. குறைந்த அளவிலான நிலக்கரியை கொண்டு அதிக அளவிலான மின் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை கொண்டு இங்கு மின்நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
தலா 660 மெகா வாட்ஸ் திரன் உள்ள இரண்டு அலகுகளில் 1320 மெகா வாட்ஸ் உற்பத்தி செய்யக்கூடிய அளவில் இந்த அனல்மின்னல் கட்டுமான பணிகள் என்பது நடைபெற்று வருகிறது. இந்த சுழலில் தான் இந்த அனல்மின் நிலையத்தில் மின்மாற்றியில் டேங்கர் லாரியில் இருந்து ஆயில் நிரப்பும் பணிகளின் போது திடீர் என தீ பற்றி கொழுந்து விட்டு தீ கரும் புகையுடன் வானுயர எழுந்தது.
இந்த தீ விபத்து குறித்து அளிக்கபட்ட தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு மூன்று நிலையங்களில் இருந்து வந்த தீ அணைப்பு வாகன வீரர்கள் தண்ணீரையும் ரசாயன நுரையும் பிச்சு அடித்து தீயை கட்டுப்படுத்தினர். முதற்கட்டமாக தீ அருகில் பரவாமல் கட்டுப்படுத்தி தொடர்ச்சியாக லாரியிலும் மின்மாற்றியிலும் முழுமையாக தீயை அணைத்தனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதின் காரணமாக அனல்மின் கட்டுமானப்பணிகளில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கபட்டுள்ளது. தொடர்ச்சியாக தீ விபத்திற்கான கரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அனல்மின் கட்டுமான பணிகளில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பரபரப்பு நிலவியது.